உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் முல்தானி மிட்டி.., இந்த 2 வழிகளில் பயன்படுத்துங்கள்
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற முல்தானி மிட்டி ஒன்று போதும்.
அந்தவகையில், இயற்கை முறையில் முல்தானி மிட்டியை பயன்படுத்தினால் முகம் வெள்ளையாக மாறும்.
1. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- கற்றாழை- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலக்கவும்.
இதற்கடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து அதை முகத்தில் தடவி உலர விடவும்.
அதன் பிறகு முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அதில் மஞ்சள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் 15 நிமிடங்கள் விடவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |