முகப்பரு தொல்லையா? எண்ணெய் சருமமா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பொருளை தினமும் இப்படி பயன்படுத்தி பாருங்க. அற்புத பலன் கிடைக்கும்!
beauty tips
By Kishanthini
முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் ஒரு ஒப்பனை பொருள் என்பது பலரும் அறிந்ததே. இன்றைய கால பெண்கள் முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.
இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். சரும பிரச்சினை பலவற்றை தீர்க்க உதவுகின்றது.
முகப்பரு, எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை எளிய முறையில் நீக்க உதவுகின்றது.
அந்தவகையில் முல்தானிமட்டியை எப்படி சருமத்திற்கு எல்லாம் பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
- முகப்பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ் பேக் போடலாம். மிக சிறந்த பலன் கிடைக்கும்.
- முல்தானிமட்டி உலர்ந்த செல்களை நீக்கவும், எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.
- முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்சனை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது.
- 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.
- வெயில்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.
- புதினா, வேப்ப இலைகளின் விழுது இவற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்கிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US