பல நூறு கோடி வருவாய்... 15,000 மட்டுமே சம்பளமாக பெறும் நிறுவனர்: அவரின் சொத்து மதிப்பு
பெங்களூருவில் இருந்து செயல்படும் CRED நிறுவனம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வந்தாலும், அதன் நிறுவனரான குணால் ஷா தற்போதும் மாதம் 15,000 மட்டுமே தமது சம்பளமாக பெற்றுவருகிறார்.
CRED என்ற நிறுவனம்
கடந்த 2018ல் CRED என்ற நிறுவனத்தை குணால் ஷா துவங்கியுள்ளார். இந்த நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் அட்டை பில்களை உரிய நேரத்தில் செலுத்துவதால் வெகுமதி அளிக்கிறது.
CRED என்ற நிறுவனத்தை துவங்கும் முன்னர் Freecharge என்ற செயலியை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களிடம் ஆதரவை ஈட்டியிருந்தார். குறித்த செயலியை 2015ல் 450 மில்லியன் டொலருக்கு Snapdeal என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.
இந்த நிலையில் 2018ல் CRED என்ற நிறுவனத்தை துவங்கினார் குணால் ஷா. வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதுடன், சிறப்பு சலுகைகளையும் வழங்கியது. கடன் அட்டை பயனர்கள் தங்களின் பல்வேறு கடன் அட்டைகளை CRED நிறுவனம் ஊடாக பயன்படுத்த முடியும்.
மொத்த சொத்து மதிப்பு 15,000 கோடி
CRED நிறுவனம் துவங்கிய பின்னர் குணால் ஷா தமது மாத சம்பளமாக வெறும் 15,000 மட்டுமே பெற்று வந்துள்ளார். தமது நிறுவனம் அதிக பணம் ஈட்டும் வரையில் தாம் அதிக தொகை ஊதியமாக பெறுவது முறையல்ல என குணால் ஷா குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தமது முந்தைய Freecharge என்ற செயலியை பெருந்தொகைக்கு விற்றதால், அதில் இருந்து கிடைத்த தொகையே தமக்கு போதுமானது எனவும் கிறிப்பிட்டுள்ளார்.
2021ல் 95 கோடி வருவாய் ஈட்டிய CRED நிறுவனம் 2022ல் 340 சதவீதம் அதிகரித்து 422 கோடி என பதிவு செய்தது. இருப்பினும் 2022ல் சுமார் 1279 கோடி அளவுக்கு வருவாய் இழப்பையையும் CRED நிறுவனம் எதிர்கொண்டது.
2021 துவக்கத்தில் குணால் ஷாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாய் என்றே கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |