நொடியில் சீட்டு கட்டு போல் சரிந்த விழுந்த பல மாடி கட்டிடம்... கமெராவில் சிக்கிய திகிலடைய வைக்கும் காட்சி
இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தில் பல மாடி கட்டிடம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லா நகரில் உள்ள Kachighati பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இன்று பிற்பகலே ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அது காலி செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்ற இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கட்டிடம் இடிந்து விழுவதை காண அப்பகுதியில் மக்கள் கூட்டாம் கூடியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
Another video of A 8-storey building collapsed in #Kachighati area of #Shimla it was vacated today afternoon no loss of life was reported while two other buildings were damaged.
— Wᵒˡᵛᵉʳᶤᶰᵉ Uᵖᵈᵃᵗᵉˢ? (@W0lverineupdate) September 30, 2021
pic.twitter.com/OpDuF0GTQL
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவில், மலைச்சரிவில் கட்டப்பட்டிருக்கும் பல மாடி கட்டிடம், நொடியில் அப்படியே சாய்ந்து தவிடு பொடியாகிறது.
खौफनाक वीडियो- हिमाचल प्रदेश के शिमला में कालका रोड पर 8 मंज़िला इमारत गिरी #HimachalPradesh #shimla pic.twitter.com/X14w6dBnwk
— Bhoopendra Singh ?? (@bhoopendrasing5) September 30, 2021