ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.1 கோடியாக மாற்றிய நிறுவனம்! குறுகிய காலத்தில் 100 மடங்கு லாபம்
ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டை ரூ.1 கோடியாக மாற்றிய நிறுவனம் என்ன என்பதையும், 4 ஆண்டுகளில் 100 மடங்கு லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு (Multibagger stock) பற்றியும் பார்க்கலாம்.
Transformers and Rectifiers India நிறுவனம்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் மற்றும் ரெக்டிஃபையர்ஸ் இந்தியா (Transformers and Rectifiers India) எனப்படும் நிறுவனத்தின் பங்கு தான், இந்திய பங்குச்சந்தையில் மல்டிபேக்கர் பங்காக (Multibagger stock) பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு பிறகு எழுச்சி அடைந்த நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது.
கடந்த 2020 -ம் ஆண்டு மே மாதம் NSE சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.6.30 என்று வீழ்ச்சி அடைந்திருந்தது. அது படிப்படியாக உயர்ந்து தற்போது 100 மடங்கு உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில், ஏப்ரல் 30 ம் திகதி பங்கின் விலை ரூ. 626.50 என்று முடிந்தது. TRIL பங்கு விலை வரலாறு: TRIL நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு பங்கின் விலை ரூ.415.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.626.50 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஒரு மாதத்தில் பங்குதாரர்களுக்கு 50 சதவீத வருவாயை வழங்கியதால் முதலீட்டாளர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
2024ல் மட்டுமே 160 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில், TRIL பங்கின் விலை சுமார் ரூ.161ல் இருந்து ரூ.626.50 ஆக உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 300 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த மல்டிபேக்கர் பங்கு ஒரு பங்கிற்கு ரூ.67.30 முதல் ரூ.626.50 வரை உயர்ந்து, சுமார் 850 சதவீதம் லாபத்தை பெற்றுள்ளது.
ரூ.1 லட்சம் TO ரூ.1 கோடி
TRIL நிறுவனத்தின் பங்கு விலை வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டால், ஒரு முதலீட்டாளர் ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ.1.50 லட்சமாக மாறியிருக்கும்.
அதே போல இந்த பங்கில் முதலீட்டாளர் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ.2.60 லட்சமாக மாறியிருக்கும்.
இதுவே ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த மல்டிபேக்கர் பங்கில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ.4 லட்சமாக மாறியிருக்கும்.
அதேபோல், ஒரு முதலீட்டாளர் இந்த மல்டிபேக்கர் பங்கில் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ.9.50 லட்சமாக மாறியிருக்கும்.
இதுவே, இந்த பங்கில் முதலீட்டாளர் ஒருவர் கொரோனா காலத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்புப் தற்போது ரூ.1 கோடியாக உயர்ந்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |