பிரபல நிறுவனத்துடன் பல மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை இழந்த ஹரி - மேகன் தம்பதி
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் Spotify நிறுவனத்துடன் மேற்கொண்ட பல மில்லியன் டொலர் ஒப்பந்த்கமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலேயே ஒப்பந்தமானது ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல் சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹரி - மேகன் தம்பதி ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
Instagram/sussexroyal
ஆனால் அந்த நிகழ்ச்சியானது பல தரப்பினரிடையே பெரும் கவனத்தையும் ஈர்த்திருந்தது. சமூகத்தில் கவனம் பெற்றுள்ள பெண்கள் பலர் மேகன் மெர்க்கலுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். ஆனால் Spotify நிறுவனமானது மேகன் முன்னெடுக்கும் நிகழ்ச்சியில் ஆழமான கருத்தாக்கத்தை எதிர்பார்ப்பதாகவும், இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிரது.
இதனிடையே, ஹரி - மேகன் தம்பதி தங்கள் நிகழ்ச்சியை இன்னொரு நிறுவனத்துடன் முன்னெடுக்க முடிவு செய்ததாலையே இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாகவும் கூறுகின்றனர்.
அமேசான் நிறுவனத்துடன் ஒபாமா
கடந்த ஆண்டு ஒபாமா தம்பதியும் தங்கள் நிகழ்ச்சிகள் தொடர்பிலான ஒப்பந்தத்தை Spotify நிறுவனத்துடன் ரத்து செய்தனர். அத்துடன் அமேசான் நிறுவனத்துடன் ஒபாமா தம்பதி புதிய ஒப்பந்தம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
@getty
ஹரி - மேகன் தம்பதியை பொறுத்தமட்டில், ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர், தங்கள் தேவைகளுக்கான நிதியை திரட்டும் நோக்கில் பல்வேறு திட்டங்களுடன் களமிறங்கியுள்ளனர்.
Spotify நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதுடன், பிரபல நூல் வெளியிடும் நிறுவனத்துடன் இணைந்து நூல் ஒன்றையும் ஹரி வெளியிட்டிருந்தார். மேலும், Netflix நிறுவனத்துடன் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |