அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு! பலி எண்ணிக்கை உயர்வு.. வெளியான பரபரப்பு காட்சிகள்
அமெரிக்காவின் FedEx மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள FedEx மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்ததாக்குதலில் பலியானவர்கள் 8 ஆக அதிகாரித்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட நபரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
#Indianapolis
— Shane B. Murphy (@shanermurph) April 16, 2021
Live from the FedEx facility. https://t.co/fExV3LlMfS pic.twitter.com/ETdRwNmBzz
தாக்குதலை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு அவசர சேவை குழு, ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் குவிந்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான FedEx மையம் இண்டியானாபோலிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.