ஒரே இரவில் பல சிறைகள் மீது தாக்குதல்: பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் தகவல்
பிரான்சில், நேற்று இரவு பல சிறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதைக் கடத்தல் கும்பல்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதற்கெதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரே இரவில் பல சிறைகள் மீது தாக்குதல்
பிரான்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பல சிறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Des établissements pénitentiaires font l’objet de tentatives d’intimidation allant de l’incendie de véhicules à des tirs à l’arme automatique. Je me rends sur place à Toulon pour soutenir les agents concernés. La République est confrontée au narcotrafic et prend des mesures qui…
— Gérald DARMANIN (@GDarmanin) April 15, 2025
சிறை அலுவலர்களை அச்சுறுத்தும் நோக்கில் வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் ஆகியவை நடந்துள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
போதைக் கடத்தல் கும்பல்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக, Toulonஇலுள்ள சிறை அலுவலர்களை தான் சந்திக்கச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |