ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF

United States of America Kieron Pollard Nicholas Pooran Cricket Record
By Karthikraja Jul 16, 2026 09:33 AM GMT
Report

MIநியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF

அமெரிக்காவின் T20 லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) T20 தொடர் கடந்த ஜூன் 18 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மோதியது. 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

நாணய சுழற்சியில் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் குவித்தது. 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் தரப்பில், நிக்கோலஸ் பூரன் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் உட்பட 106 ஓட்டங்கள் குவித்தார்.

கீரன் பொல்லார்ட், 25 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 64 ஓட்டங்கள் குவித்தார். 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

வாஷிங்டன் ஃப்ரீடம் தரப்பில், ரச்சீன் ரவீந்திரா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.  

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்

தொடர்ந்து, 270 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம், 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள்குவித்து வெற்றி பெற்றுள்ளது.

அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆண்ட்ரீஸ் கௌஸ் சதம் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

ஸ்மித், 48 பந்துகளில், 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 110 ஓட்டங்கள் குவித்தார். ஆண்ட்ரீஸ் கௌஸ் 51பந்துகளில், 10 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 132 ஓட்டங்கள் குவித்தார்.

சாதனைகள்

இந்த வெற்றி மூலம், டி20 வரலாற்றிலேயே மிக அதிகபட்ச இலக்கை விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை வாஷிங்டன் ஃப்ரீடம் அணி படைத்துள்ளது.

முன்னதாக 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

மேலும், MLC T20 வரலாற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் எடுத்துள்ள 270 ஓட்டங்களே ஒரு அணி எடுத்துள்ள மொத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு பிளேஆஃப் அல்லது நாக்-அவுட் போட்டியில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில், 51 சிக்ஸர்கள் விளாசியுள்ளதன் மூலம், ஒரு T20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை படைத்துள்ளது. 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் PBKS அணிகளும், 2024 CPL தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளும் தலா 42 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரீஸ் கோஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் சதம் அடித்ததன் மூலம், ஒரு டி20 போட்டியில் 3 வீரர்கள் சதம் அடித்த முதல் போட்டி என்ற பெருமையை பெற்றது. 

31 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், MLC T20 வரலாற்றில் அதிவேக சதமடித்த சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார். 

ஒரே போட்டியில் 51 சிக்ஸர்கள், 3 சதங்கள், 8 சாதனைகள் - MI நியூயார்க் அணியை வீழ்த்திய WAF | Multiple Records Chasen In Miny Vs Waf In Mlc

மேலும், MLC T20 வரலாற்றில் சதமடித்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை ஆண்ட்ரீஸ் கோஸ் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் அடித்த 8 சிக்ஸர்கள் மூலம் மொத்தமாக 1001 சிக்ஸர்கள் அடித்துள்ள கீரன் பொல்லார்ட் T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1056 சிக்ஸர்களுடன் சக மேற்கிந்திய தீவுகள் வீரரான கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US