லண்டனில் அவருடன் இருக்கலாம்! 2 குழந்தைகளுடன் மாயமான இளம்தாயார் தொடர்பில் முக்கிய தகவல்
வேல்ஸில் 2 குழந்தைகளுடன் 10 நாட்களுக்கு மேலாக காணாமல் போன இளம் தாயாரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இளம் தாயார் குழந்தைகளுடன் மாயம்
ஆண்ட்ரியா ஒகன் (30) என்ற பெண் கடந்த 5ஆம் திகதி கார்டிப்பில் இருந்து தனது இரண்டு குழந்தைகளான மாட்டியூ (7) மற்றும் பாலோ (3) காணாமல் போனார்.
மூவரும் லண்டனில் ஆண்ட்ரியாவின் துணையான லூயிஸ் ரொட்ரிகுஸ் (32) என்பவருடன் இருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
South Wales Police
பொதுமக்களிடம் கோரிக்கை
அதே நேரம் மூவரின் நலன் குறித்து கவலையும், அக்கறையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா தொடர்பில் பொலிசார் முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதன்படி அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், மூவரும் இருக்கும் இடத்தைப் பார்த்தாலோ அல்லது தெரிந்தாலோ, உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
South Wales Police