பிரித்தானிய சாலையில் நடந்த கோர சம்பவம்: இளம் தாயாருடன் உடல் நசுங்கி பலியான பிஞ்சு குழந்தைகள்
பிரித்தானியாவில் லொறியுடன் நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் இளம் தாயாருடன் மூன்று பிள்ளைகள் உடல் நசுங்கி பலியாகினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்த விபத்தில் 29 வயதான Zoe Powell, அவரது 8 வயது மகள் Phoebe, 6 வயது மகன் Simeon, மற்றும் 4 வயது மகள் Amelia ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர்.
இந்த விபத்தில் 18 மாத குழந்தை பென்னி மற்றும் அதன் தந்தை ஜோஷ் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த வழக்கு விசாரணையில் இளம் தாயாரும் மூன்று பிஞ்சு பிள்ளைகளும் சாலை விபத்தில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டுஷையரில் அமைந்துள்ள A40 சாலையில் தவறான பாதையில் சென்றதாலையே, எதிரே வந்த லொறியுடன் கார் மோதியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் தவறான சாலையை பயன்படுத்தியதன் காரணம் என்ன என்பது விசாரணையில் குறிப்பிடப்படவில்லை. மட்டுமின்றி, இது தற்கொலை முடிவா என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட Zoe Powell தவறான முடிவை எடுக்க வாய்ப்பில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி விபத்தின் போது, அந்த கார் வேகமாக பயணித்திருந்ததாகவும், லொறி மீது மோத வாய்ப்புள்ளது என்பதை கணிக்கும் முன்னர் விபத்து நடந்ததாகவும் லொறி சாரதி தெரிவித்துள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        