வெறும் 1 பவுண்டு செலவிட்டு 200,000 பவுண்டுகள் அள்ளிய தாயார்: பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு
பொருளாதார நெருக்கடி காரணமாக தினமும் இரண்டு வேலை பார்த்து அல்லல் அனுபவித்த தாயார் ஒருவர் வெறும் 1 பவுண்டு செலவிட்டு Nifty Fifty-ல் 200,000 பவுண்டுகள் அள்ளியுள்ளார்.
குறைவான ஊதியத்தில் இரண்டு வேலைகள்
பிரித்தானியாவில் குடிபெயர்ந்து, தமது இரு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்க்கும் பொருட்டு இரண்டு வேலை பார்த்து வந்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த Araya Curry.
குறைவான ஊதியத்தில் இரண்டு வேலைகள் பார்த்து வந்துள்ள அவர் தற்போது தமது குடும்பத்துடன் கனவு வாழ்க்கையை வாழும் பொருட்டு சொந்த நாட்டுக்கு திரும்ப உள்ளார்.
Nifty Fifty ஆட்டத்தில் அவருக்கு 200,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. பகலில் முதியோர் காப்பகம் ஒன்றை சுத்தம் செய்யும் பணியும் மாலையில் உணவகம் ஒன்றில் பரிமாறும் பணியும் செய்து வந்துள்ளார் Araya Curry.
தற்போது கிடைத்துள்ள இந்த பெருந்தொகையானது Araya Curry மற்றும் அவரது கணவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. சஃபோல்க் பகுதியில் வசித்து வரும் 40 வயதான Araya Curry தெரிவிக்கையில்,
வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது
நீண்ட காலமாக தாம் நாளும் 14 மணி நேரம் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது கிடைத்துள்ள நினைத்துப்பார்க்க முடியாத பெருந்தொகையானது தங்கள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது என்றார்.
தாய்லாந்தில் தற்போது நிலம் வாங்கி, அங்கே 6 படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 1 பவுண்டு செலவிட்டு, 200,000 பவுண்டுகள் தொகையை தமது மனைவி அள்ளியது தம்மால் நம்ப முடியவில்லை என்கிறார் அவரது கணவர்.
மேலும், Betfred நிறுவனம் உருவானதன் பின்னர் கடந்த 57 ஆண்டுகளில் முதல்முறையாக பெருந்தொகையை ஒருவர் வென்றுள்ளார் என்றும், Araya Curry அதற்கு தகுதியானவர் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |