போதுமான பணம் இல்லாததால் வாங்கிய பொருட்களை திருப்பி வைக்கச் சென்ற பெண்: நடந்த எதிர்பாராத சம்பவம்
இங்கிலாந்தில் வாழும் இளம் தாய் ஒருவர், மளிகைக் கடைக்குச் சென்றிருந்த நிலையில், தான் எடுத்த மளிகைப் பொருட்களை வாங்கும் அளவுக்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை உணர்ந்து, எடுத்த பொருட்களை திருப்பி வைக்கச் சென்றுள்ளார்.
பில் போடச் சென்றபோது தெரியவந்த உண்மை
இங்கிலாந்திலுள்ள Denton என்னுமிடத்தில் வாழும் Beth Nelson என்னும் இளம் தாய், மளிகைக்கடை ஒன்றிற்குச் சென்றுள்ளார். பில் போடச் சென்றபோதுதான், தான் எடுத்த பொருட்கள் அனைத்தையும் வாங்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.
வரிசையில் நின்றவர்கள் தன்னையே பார்க்க, வெட்கத்துடன் தான் எடுத்த பொருட்கள் சிலவற்றை திருப்பி வைக்கச் சென்றுள்ளார் Beth.
நடந்த எதிர்பாராத சம்பவம்
அப்போது, மற்றொரு பெண் Bethஐ நெருங்கியுள்ளார். அவர் தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் ஏதாவது கூறப்போகிறார் என Beth குறுகிப்போய் நிற்க, அந்தப் பெண்ணோ, எடுத்த மளிகைப் பொருட்களை திருப்பி வைக்கவேண்டாம் என்று கூறியதுடன், அந்த வாரத்துக்கு குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில் Bethக்காக, 41.65 பவுண்டுகளையும் செலுத்தியுள்ளார்.
அத்துடன் நிற்காமல், Beth வெளியே வந்த பிறகும், அவரை கட்டியணைத்து, வாழ்க்கையில் எல்லலோருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு நிலைமையைக் கடந்துதான் வந்திருப்பார்கள். நானும் ஆரம்ப காலத்தில் இதுபோல பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
Beth, சமூக ஊடகம் ஒன்றில் இந்த விடயத்தைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், தங்களுக்கும் இதே போல உதவி கிடைத்த தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்கள் பலர்.
@boowitchy ♬ original sound - boowitchy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |