தன் குழந்தைகள் இறந்துபோனதாக கனவில் கண்ட பெண்: மருத்துவமனையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
இங்கிலாந்தில் வாழும் பெண் ஒருவர், ஒரு நாள் இரவில் தன் பிள்ளைகள் இறந்துபோனதாக கனவு கண்டிருக்கிறார்.
Crawley என்ற இடத்தில் வாழும் Laks Rana என்ற அந்த பெண் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்து உட்கார்ந்து அழுதிருக்கிறார். அது கனவுதான் என்றாலும், அவரது உள்மனம் ஏதோ சொல்ல, மறுநாளே பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
Laks Ranaவின் பிள்ளைகளை பரிசோதித்த மருத்துவர், அவரது மகனான Amrit (8)க்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளர்கள்.
ஆனால், அவரது மகளான Anaya (4)இன் காலில் ஒரு காயம் இருப்பதைக் கவனித்த ஒரு மருத்துவர் அவளை பரிசோதனைகளுக்கு உட்படுத்த, பயங்கர அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று Laks Ranaவுக்கு சொல்லப்படது.
அது, Anaya, acute lymphoblastic leukaemia என்னும் பயங்கர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான்.
Anayaவின் பெற்றோர் அதிர்ந்துபோக, மருத்துவர்கள் உடனடியாக அவளுக்கு சிகிச்சையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆறு மாத கடும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறாள் Anaya. அந்த காலகட்டத்தில் அவளது பெற்றோர் அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளால் சொல்லி மாளாது.
அம்மாவுக்கு எல்லாம் தெரியும் (Mother knows everything) என்று ஒரு சொல் வழக்கு உண்டு. Anaya விடயத்தில் அது உண்மையாகியிருக்கிறது.
தன் பிள்ளைகளின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டது போல கனவு வந்ததும், அதை அலட்சியப்படுத்தாத Laks Ranaவின் உள்ளுணர்வு அவரது மகளின் நோயைக் கண்டறிந்து ஏற்ற நேரத்தில் சிகிச்சையளிக்கவும் உதவியுள்ளது ஆச்சரியம்தான்!