சாக்கடையில் இறந்து கிடந்த மகனின் உடலை டிராக்கிங் செயலி மூலம் கண்டு பிடித்த தாய்
பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஓட்டுநரின் கார் மோதி உயிரிழந்த நபரின் உடலை டிராக்கிங் செயலி மூலம் அவரது தாய் கண்டுபிடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகனைத் தேடிய தாய்
பிரித்தானியாவை சேர்ந்த ஜோஷ் அஸ்வொர்த்(22) என்பவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த பிஎம்டபுள்யூ கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
ஜோஷ் தலையில் பலமாக அடிப்பட்டு அவரது உடல் சாக்கடையில் கிடந்திருக்கிறது. ஜோஷ் அஸ்வொர்த்தை காணவில்லை என சந்தேகப்பட்ட அவரது தாய் அவரை தேடியுள்ளார்.பின்னர் ஜோஷின் நண்பர்களுக்கு அழைத்து விசயத்தை கூறியுள்ளார்.
@Facebook
உடனே அங்கு வந்த நண்பர்கள் அவரது ஐ போனை பயன்படுத்தி டிராக்கிங் செயலி மூலம் அவரது அடி பட்டு கிடக்கும் இடத்தை கண்டு பிடித்துள்ளனர். ஜோஷின் உடல் ஒரு பாதாள சாக்கடையில் தலையில் பலமாக அடிப்பட்டதில் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறது.
அதனைப் பார்த்த அவரது தாய் முதலில் அவர் இறக்கவில்லை என நினைத்து சில முதலுதவிகளை செய்திருக்கிறார். ஆனால் அவர் உயிரிழந்தது பின்னர் தெரிய வந்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஓட்டுநர்
ஜோஷ் அஸ்வொர்த் என்ற நபர் ஏற்கனவே விதிக்கப்பட வேகத்தை விட அதிவேகமாக ஓட்டியதாக கூறி கைது செய்யப்பட்டு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டவர் ஆவார்.
@Richard Vamplew/Media Lincs.
இந்த நிலையில் தடையை மீறி வாகனம் ஓட்டியது மட்டுமில்லாது, ஒருவர் உயிரிழக்கும் வகையில் விபத்தை உண்டாக்கிய கோலே டிரெசிட்டெர் என்ற நபருக்கு 7 ஆண்டுகள் மற்றும் 2 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
”ஏன் இந்த நல்ல மனிதனை சாலையில் பார்த்தும் கண்டுகொள்ளாமல் போனார்கள்? என் மகனை இவ்வளவு மோசமான நிலையில் தான் நான் பார்க்க வேண்டுமா” என ஜோஷ் அஸ்வொர்த்தின் தாய் ரச்செல் உருக்கமான தெரிவித்துள்ளார்.
@Facebook
பிரித்தானிய நீதிமன்றத்தில் “டிராக்கிங் செயலியைப் பயன்படுத்தி தனது மகன் போன் மூலமாக ஜோஷை அவரது தாய் சாக்கடையில் கண்டுபிடித்துள்ளார்.
நீதிபதி “மேலும் என் அழகான மகன் சாலையில் ஓரத்தில் உயிரற்று கிடந்தான். என காவல்துறையிடன் கூறினார்” என்றவாறு நீதிபதி வழக்கின் வாக்கியங்களை படித்துள்ளார்.