வெளிநாட்டில் சடலமாக மீட்கபட்ட பிள்ளைகள்... லண்டனில் கைதான தாயார்
அமெரிக்காவில் தனது இரு பிள்ளைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
குடியிருப்பு ஒன்றில் சடலமாக
அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், கிம்பர்லீ சிங்கிளரின் ஒன்பது வயது மகளும், ஏழு வயது மகனும் கொலராடோவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவரது 11 வயது மகளும் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
@bbc
டிசம்பர் 19ம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 12.29 மணிக்கு தொடர்புடைய குடியிருப்பில் இருந்து 911 இலக்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், இதனையடுத்தே சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்ததாகவும் கூறப்படுகிறது.
35 வயதான சிங்கிளர் மற்றும் அவரது 11 வயதான மகள் ஆகியோருக்கு சம்பவயிடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு நாடு கடத்த நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் ஒத்துழைத்து வந்த சிங்கிளர் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிசம்பர் 26ம் திகதி கொலை வழக்கு தொடர்பில் அவர் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
Credit: Dabb Kory R
தொடர்ந்து அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், டிசம்பர் 30ம் திகதி மேற்கு லண்டனில் அவர் கைதாகியுள்ளார்.
அத்துடன் ஜனவரி 1 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் மீது இரண்டு முதல் நிலை கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும், சிறார் துஸ்பிரயோக வழக்குகளும் தாக்குதல் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |