லொட்டரியில் வென்ற பெருந்தொகை... பிரித்தானிய தாயாரிடம் திருப்பிச் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்

arrest police investigation Liverpool
By Arbin Jan 12, 2022 04:56 PM GMT
Report

பிரித்தானியாவில் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயார் ஒருவரை, அவர் லொட்டரியில் வென்ற தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான Elaine Hindley. தனது போதை மருந்து பழக்கத்திற்கு பணம் திரட்டுவதற்காக, உள்ளூரில் போதை மருந்து விற்பனையை முன்னெடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 2020 ஏப்ரல் மாதம், இரகசிய தகவலின் அடிப்படையில் இவரது வாகனத்தை சோதனையிட்ட பொலிசார், போதை மருந்து பொட்டலங்களை கைப்பற்றியதுடன், அவரது குடியிருப்பை சோதனையிட அனுமதியும் பெற்றனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையின் முடிவில், 2021 ஜூலை மாதம் அவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Elaine Hindley சிறைக்கு செல்லும் முன்னர் லொட்டரியில் சுமார் 150,000 பவுண்டுகள் தொகையை பரிசாக வென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம், அவர் லொட்டரியில் வென்ற தொகையில் சுமார் 49,550 பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Elaine Hindley தமது போதை மருந்து விற்பனையால் 49,550 பவுண்டுகள் அளவுக்கு ஆதாயம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த தொகையை அவர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாத காலத்தில் குறித்த தொகையை அவர் செலுத்த தவறினால், மீண்டும் 8 மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Elaine Hindley கைதாவதற்கு முன்னர் பொலிசார் நடத்திய தீவிர சோதனையில், அவரது கார் மற்றும் குடியிருப்பில் இருந்து 28,000 பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்தும், சுமார் 5,300 பவுண்டுகள் ரொக்கமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US