9 வயது மகளின் உயிரைக் காக்க உயிரைக் கொடுத்து போராடும் பிரித்தானிய தாயார்
ஆபத்தான இரத்தக் கோளாறால் பாதிக்கப்படுள்ள மகளுக்காக தாயார் ஒருவர் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார்.
பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக
உடல் முழுவதும் அடிக்கடி சிராய்ப்பு காயம் ஏற்படுவதாக குறிப்பிட்டு மொபீன் ஹுசாய் தனது ஒன்பது வயது மகள் அமிலாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் முன்னெடுத்த பரிசோதனையில், சிறுமி அமிலாவுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருந்ததுடன், அப்லாஸ்டிக் அனீமியா இருப்பதும் கண்டறியப்பட்டது.
அப்லாஸ்டிக் அனீமியா என்பது எலும்பு மஜ்ஜையால் உடல் சாதாரணமாக வேலை செய்ய போதுமான புதிய இரத்த அணுக்களை உருவாக்க முடியாத போது ஏற்படும் ஒரு அரிய கோளாறு ஆகும்.
தற்போதைய சூழலில் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அமிலாவின் உயிரைக் காக்கும் ஒரே தீர்வு. ஆனால் ஸ்டெம் செல் தானம் செய்வதற்கு தற்போது பொருத்தமாக எவரும் இல்லை.
இந்த பாதிப்புக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும், அமிலா நலமாக இருக்கும் சிகிச்சை முன்னெடுப்பது நன்றாக இருக்கும் என்றே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் அவள் விரைவாக குணமடைவாள் என்றும் தாயார் மொபீன் ஹுசாய் தெரிவித்துள்ளார்.
ஸ்டெம்செல் தானம் என்பது
16ல் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஸ்டெம் செல் தானம் அளிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மொபீன் ஹுசாய் முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் சம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், பிரித்தானியாவில் தமது மகளைக் காக்கும் ஸ்டெம் செல் தானம் குறிப்பாக எவரும் முன்வரவில்லை என்ற ஆதங்கத்தையும் மொபீன் ஹுசாய் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஐரோப்பிய நாடுகளின் பின்னணி கொண்டவர்களுக்கு இப்படியான சிக்கல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெம்செல் தானம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையை பரிசாக அளிப்பதாகும்; எவருக்கும் கொடுக்கக் கூடிய இது ஒரு விலையுயர்ந்த பரிசு என்றும் மொபீன் ஹுசாய் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 பேர் மட்டுமே அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், 10 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களிடமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் இது மிகவும் பொதுவாக காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |