பிரித்தானியாவில் இளைஞரை வலைவீசித் தேடும் பொலிசார்... பச்சிளம் குழந்தை முன்பு கொல்லப்பட்ட தாயார்
பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தையுடன் சென்ற இளம் தாயார் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கொலைகாரனை பொலிசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு உதவ வேண்டும்
பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார், கண்காணிப்பு கமெராவில் சிக்கிய காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் 25 வயது Habibur Masum என அடையாளம் கண்டுள்ளனர்.
கொலைகாரன் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் சந்தேக நபருக்கும் தொடர்பிருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதனிடையே, 69 வயதான Geo Khan தெரிவிக்கையில், தமது கடையில் தொடர்புடைய பெண் வழக்கமான வாடிக்கையாளர் என்றும், திடீரென்று அலறல் சத்தம் கேட்கவும், தாம் கடைக்குள் இருந்து வெளியே விரைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது பெண் ஒருவர் நடைபாதையில் முகம் குப்புற விழுந்து கிடந்ததாகவும், அவரது 5 மாத குழந்தை சக்கர நாற்காலியில் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும், உயிர் பிரிந்திருந்ததை உணர்ந்ததாகவும் Geo Khan தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருக்கு தகவல்
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3.21 மணிக்கு தொடர்புடைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. விசாரணையை முடுக்கி விட்டுள்ள பொலிசார், ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது தேடப்பட்டுவரும் 25 வயது Habibur Masum மான்செஸ்டர் அருகே உள்ள ஓல்ட்ஹாம் பகுதியில் வசித்து வருபவர் என்றும், ஆசிய நாட்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையான பெண் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |