தாயார் எடுத்த அந்த துணிச்சலான முடிவு.... பிரித்தானிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை
20 பவுண்டுகள் கடன் தொகைக்காக இளைஞர் ஒருவர் 16 வயது சிறுவனை கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவத்தை அவரது தாயார் பொலிசாருக்கு தெரிவித்த நிலையில், தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு தெரியப்படுத்திய தாயார்
19 வயதேயான ஜோசுவா டெல்போனோ என்பவர் 16 வயது சார்லி பேட்ஸ் என்பவரை கொலை செய்த விவகாரத்தை தாயார் துணிவுடன் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் ஜோசுவா.
Image: AVON
சம்பவத்தன்று நள்ளிரவு பொலிசாருக்கு தொலைபேசியில் அழைத்த அந்த தாயார், தனது மகன் ஒருவரை கொலை செய்துள்ளதாகவும், அவர் தற்போது குடியிருப்பில் இருப்பதாகவும், அவனை வெளியே அனுப்ப தாம் விரும்பவில்லை எனவும் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தமது மகனையும் பொலிசாரிடம் பேச வைத்துள்ளார். தொடர்புடைய கொலை சம்பவம் சோமர்செட் பகுதியில் நடந்துள்ளது. ஜோசுவா டெல்போனோ கூரான ஆயுதத்தால் 5 முறை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
Image: AVON
ஆனால் தாயார் 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்த நிலையில் டெல்போனோ பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இரண்டு வார விசாரணைக்குப் பின், ஏழு மணி நேர விவாதத்திற்குப் பிறகு, நடுவர் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
நண்பரைப் பாதுகாக்க
டெல்போனோ சார்லியை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார், ஆனால் கொலை செய்ததை மறுத்தார், ஒரு நண்பரைப் பாதுகாக்க அவ்வாறு செயல்பட்டதாகக் கூறினார்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மாயமான டெல்போனோ நேரே வார்மின்ஸ்டர் அருகில் உள்ள ஷீயர்வாட்டர் ஏரிக்கு விரைந்துள்ளார். அங்கே, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை மறைவு செய்துவிட்டு, ரத்தக்கறை படிந்த தமது ஆடைகளையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
Image: AVON
பொலிஸ் விசாரணையில் தொடக்கத்தில் உரிய பதிலளிக்க மறுத்து வந்த டெல்போனோ பின்னர் சார்லியின் மார்பில் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.