இலங்கைக்கு செல்ல அனுமதி கேட்ட ஷில்பா ஷெட்டி: ரூ 60 கோடி செலுத்த கூறிய நீதிமன்றம்
மோசடி வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ரூ.60 கோடி டெபாசிட் செலுத்த வேண்டும் என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.
ரூ.60 கோடி மோசடி
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் சேர்ந்து, ரூ.60 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பணத்தை திருப்பி அளித்ததாக சில ஆவணங்களை ஷில்பா ஷெட்டி சமரிப்பித்தார். அதனை ஆராய்ந்து வருவதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினரால் தங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி, ஷில்பா தம்பதியினர் கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதன்மூலம் அவர்கள் தங்கள் தொழில்முறை கடமைகள் மற்றும் வெளிநாட்டு ஓய்வு பயணங்களை மேற்கொள்ளலாம்.
அனுமதி கோரிய ஷில்பா ஷெட்டி
இந்த நிலையில், யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்ல வேண்டி ஷில்பா ஷெட்டி அனுமதி கோரினார்.
ஆனால், ஏமாற்றுதல் மற்றும் மோசடி வழக்கில் இருவரும் குற்றம்சாட்டப்பட்டிருக்கும்போது, ஓய்வு பயணங்களை அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், ஷில்பா ஷெட்டி கலந்துகொள்ள வேண்டிய தொழில்முறை நிகழ்வுகளுக்கான அழைப்பிதழின் நகல் அல்லது வேறு எந்த வகையான தகவல்தொடர்பையும் கோரியது.
அத்துடன் ரூ.60 கோடி முழுத்தொகையும் டெபாசிட் செய்யப்பட்ட பிறகே மனுவை பரிசீலிப்பதாகவும், அதனை செலுத்தி பின் வெளிநாடு செல்லலாம் என்றும் கூறிய நீதிமன்றம், வழக்கை 14ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |