மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
மும்பையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடங்கள்
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இடைவிடாமல் பெய்து வரும் பருவமழை காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, மரங்கள் சரிந்து விழுந்தது மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது என மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு புறநகர்ப் பகுதியான மான்குர்த் பகுதியில் கனமழை காரணமாக இரண்டு முதல் மூன்று அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் மரம் முறிந்து விழுந்து ஏற்கனவே 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விமான சேவைகள் முடக்கம்
Rainfall information over mumbai from 0830 hrs IST of 5th July 2026 to 0830 hrs IST of 6th July 2026 in mm#MumbaiRainfall #WeatherUpdate #Monsoon2026 #MumbaiWeather #RainfallData #IndiaWeather #JulyRain #MumbaiForecast @moesgoi @airnewsalerts @DDNational @ndmaindia… pic.twitter.com/RNt6Q1oaHM
— India Meteorological Department (@Indiametdept) July 6, 2026
மும்பையின் நகர்புற பகுதியில் சராசரியாக 100மி.மீ(3.9 அங்குலம்) மழை பொழிந்துள்ளது, சில பகுதிகளில் அதிகபட்சமாக 161மி.மீ (6.3 அங்குலம்) மழை பொழிந்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையங்களிலும் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு தாமதங்கள் மற்றும் விமான ரத்துகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மும்பை, தானே மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |