முகேஷ் அம்பானி தந்த சர்ப்ரைஸ்! மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அட்டகாசமான புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அணியின் உரிமையளர் முகேஷ் அம்பானி சார்பில் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தரப்பட்டுள்ளது.
ஜெர்சியில் ஏற்பட்ட மாறுதல்
அதாவது முதல் ஆச்சரியமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி வழங்கப்பட்டது. இதில் வழக்கம் போல் நீல நிற ஆடையுடன் இருந்தாலும் SLICE என்ற புதிய நிறுவனத்தின் பெயர் அதில் இடம்பெற்று இருந்தது.
இதனையத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு பயோ பபுள் சூழலில் மன தொய்வு ஏற்படுவதை தடுக்க, முழுக்க முழுக்க ஹோட்டலுக்கு வெளியவே பொழுதை கழிக்கும் அளவுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பானி.
Battleground என்ற புதிய விளையாட்டு களம்
இதில், திறந்தவெளியின் பெரிய திரையில் டிவி பார்ப்பது, உணவு அருந்த தனி இடம், விளையாடுவதற்கு திறந்தவெளியில் ஆடுகளம் ஆகியவை அமைத்து தரப்பட்டுள்ளது. இதே போன்று Battleground என்ற புதிய விளையாட்டு களமும் வீரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் வீரர்கள் விளையாட்டு துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர்கள் போல் தவழ்ந்து, ஏகிறி குதித்து விளையாடலாம். இந்த சாகச விளையாட்டு மூலம் வீரர்களுக்கு உடல் தகுதியும் மேம்படும், பயோ பபுள் தொல்லையும் இருக்காது.
கோல்ஃப் ஆடுகளம் மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு கோல்ஃப் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் பயோ பபுள் காரணமாக வெளியே செல்ல முடியாது என்பதால் ஹோட்டலுக்கு வெளியவே திறந்தவெளியில் கோல்ஃப் மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.