டஃப் கொடுத்த ஹைதராபாத்., வெற்றி பெற்றும் ப்ளே-ஆப் வாய்ப்பை இழந்த நடப்பு சாம்பியன் மும்பை!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
அபுதாபி மைதானத்தில் ஐபிஎல் 2021 தொடரின் 55-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்க தகுதி பெற வேண்டுமானால் ஹைதராபாத் அணியை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இதனால் மும்பை அணி ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கை நிர்ணயக்க ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் இஷான் கிஷான் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நான்கு புறமும் சிதறவிட்டார்.
32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸ்ர்கள் விளாசி 84 ஓட்டங்கள் அடித்து அவுட்டாகினார். மும்பை அணி மற்றொரு இளம்வீரர் சூர்யகுமார் யாதவ் இறுதி ஓவர்களில் ரன்வேட்டையில் ஈடுபட்டார். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது.
சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 82 ஓட்டங்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் அவுட்டாகினார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் அடித்தது. சன்ரைசர்ஸ் அணியை 65 ஓட்டங்களுக்கு சுருட்டினால் மும்பை அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் சன்ரைசர்ஸ் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் பவர் ப்ளேவில் 65 ஓட்டங்களைக் கடந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு கைவிட்டு போனது.
.@mipaltan seal a 42-run win over #SRH! ? ?
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
A solid performance with the bat sets up a fine victory for the @ImRo45-led unit in Abu Dhabi. ? ? #VIVOIPL #SRHvMI
Scorecard ? https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/Ted3wkiyQp
சன்ரைசர்ஸ் அதிரடியாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. அந்த அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே அதிரயாக விளையாடி அரைசதம் கடந்தார். இமாலய இலக்கு என்பதால் சன்ரைசர்ஸ் அணியால் மும்பையை வீழ்த்த முடியவில்லை.
இறுதியாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே 69 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.
மும்பை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது.