பட்லர் சதம்.. மும்பையை ஊதி தள்ளி 2வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்!
2022 ஐபிஎல் தொடரில் இன்று ஏப்ரல் 2ம் திகதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று ஏப்ரல் 2ம் திகதி Dr DY Patil மைதானத்தில் நடந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்லரின் அதிரடி சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
பட்லர் (100), ஜெய்ஸ்வால் (1), படிக்கல் (7), சாம்சன் (30), ஹெட்மயர் (35), பராக் (5), அஸ்வின் (1), சைனி (2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை தரப்பில் பந்து வீச்சில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இஷான் கிஷான் (54), ரோகித் (10), அன்மோல்பிரீத் சிங் (5), திலக் வர்மா (64), பொலார்டு (22), டேவிட் (1), டேனியல் சாம்ஸ் (0), முருகன் அஸ்வின் (6) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பிரபல ஐரோப்பிய நாட்டில் விற்கும் ரஷ்யா!
ராஜஸ்தான் தரப்பில் பந்து வீச்சில் சைனி, சாஹல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் அணி தொடர்ந்து 2 வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்த மும்பை அணி, புள்ளிகள் ஏதுமின்றி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.