மிகவும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட 4 வீரர்கள்! ரசிகர்களை ஏமாற்றிய ஹைதராபாத்
வரும் ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்க வைத்துள்ளோம் என்பதை அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மிகவும் பலம் வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனால் இதை ஒரு கடப்பாரை அணி என்று கூறப்பட்டு வந்தது.
இதனால் மும்பை அணி எந்த நான்கு வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன் படி சற்று முன்பு மும்பை அணி தக்க வைக்கப்படும் நான்கு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
The @mipaltan retention list is out!
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Comment below and let us know what do you make of it❓#VIVOIPLRetention pic.twitter.com/rzAx6Myw3B
அதில், ரோகித்சர்மாவை 16 கோடிக்கும், கிரண் பொல்லார்ட்டை 6 கோடிக்கும், ஜஸ்ப்ரிட் பும்ராவை 12 கோடிக்கும், சூர்யகுமார் யாதவ்வை 8 கோடிக்கும் தக்க வைப்பதாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி வில்லியம்சன்(14 கோடி), உமர் மாலிக்(4 கோடி), அப்துல் சமாத்(4கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கானை ஹைதராபாத் அணியை தக்க வைத்து கொள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
Take a look at the @SunRisers retention list ?#VIVOIPLRetention pic.twitter.com/fXv62OyAkA
— IndianPremierLeague (@IPL) November 30, 2021