மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்
mumbai indians promoted pollard as head coach: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
MI தலைமை பயிற்சியாளராக பொல்லார்ட்
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேலா ஜெயவர்தனே, 2017 முதல் 2022 வரையிலும், பின்னர் 2024 முதல் 2026 வரையிலும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

கடந்த வாரம், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மஹேலா ஜெயவர்தனே விலகினார்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
“Pollard joined Mumbai Indians as a young 22-year-old and, over the past sixteen years, has become an integral part of our family. As a player, he gave us many unforgettable moments, and as a coach, he has continued to share his experience, passion and deep understanding of the game. We are delighted to see him take on this new responsibility as Head Coach. Polly knows what it means to wear the MI jersey and what it takes to play for the Paltan. I am confident that he will bring the same commitment, belief and determination to this role. I wish him every success as he leads the team into its next chapter.” - Mrs. Nita M. Ambani
— Mumbai Indians (@mipaltan) October 24, 2026
2010 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த கீரோன் பொல்லார்ட், அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும் அணியிலிருந்தார்.
2022 ஐபிஎல் தொடருக்கு பின்னர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
பொல்லார்ட் The Hundread, MLC போன்ற மற்ற T20 லீக்குகளிலும் MI அணிகளில் விளையாடி வருகிறார்.