விமான நிலையத்துக்கு வினோதமாக வந்த வீரர்! மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்த தண்டனை
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவருக்கு அந்த அணி ஒரு வினோதமான தண்டனை கொடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நேஹல் வதேரா (Nehal Wadhera ) பேட்டிங் பேட் அணிந்தபடி மும்பை விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.
வழக்கத்திற்கு மாறான அவரது ஆடை தோற்றம் நிச்சயமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இதனை அவரே விருப்பப்பட்டு செய்யவில்லை.
Mumbai Indians Twitter
தண்டனை
பேட்டர்ஸ் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்காக மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளரால் வழங்கப்பட்ட தண்டனையாகும்.
அதாவது, அவரது தாமதத்திற்கு தண்டனையாக நேஹல் தனது கால்சட்டைக்கு மேல் பேட்டிங் பேட்களை அணிய வேண்டியிருந்தது.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த வீடியோவை அதன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் நேஹல் வதேரா தண்டனையுடன் மும்பை விமான நிலையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் வழக்கமான ஜம்ப்சூட்டுக்கு பதிலாக தனது பேட்டிங் பேட்களுடன் காணப்பட்டார். எங்கள் ஆதாரங்களின்படி, நேஹால் பேட்டர்ஸ் சந்திப்புக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறார்." என்று பதிவிட்டுள்ளது.
#MumbaiIndians youngster #NehalWadhera turned all heads at Mumbai airport with his punishment #OOTD. He was captured with his pads on instead of traditional jumpsuit. According to our sources, #Nehal regrets being late for batters meeting. pic.twitter.com/vCzenvIWzC
— Mumbai Indians (@mipaltan) May 13, 2023
இன்றைய ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2023-ல் 12 ஆட்டங்களில் விளையாடியதன் மூலம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இன்று (செவ்வாய்) ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.
கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளதால், அணி சிறப்பான வேகத்தை கொண்டுள்ளது. அவர்கள் எல்.எஸ்.ஜி அணிக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பெற முனைப்புடன் உள்ளனர்.
Mumbai Indians, Cricket News, IPL 2023, Nehal Wadhera