பெண்கள் அணியின் ஜெர்சியுடன் களமிறங்கும் மும்பை இண்டியன்ஸ்! போட்டியை காண குவியும் 19 ஆயிரம் ரசிகைகள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை அணியின் மகளிர் ஜெர்சியை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kolkata night riders) அணி விளையாடவுள்ளது.
@cricbuzz
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே பலவீனமாக உள்ள நிலையில், வலிமையான கே.கே.ஆர் அணியை எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஜெர்சியை மாற்றி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை
மும்பை அணி உரிமையாளர் நீட்டா அம்பானியின் Education and Sports For All என்ற ESA அமைப்பின் முன்னெடுப்பிற்காக, மும்பை அணி வீரர்கள் WPL தொடரில் மும்பை வீராங்கனைகள் அணிந்த ஜெர்சியோடு களமிறங்க உள்ளனர்.
@mumbaiindians.com
விளையாட்டில் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அதிகரிக்கவும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முன்னெடுக்கிறது. இன்றையப் போட்டியில் 19 ஆயிரம் பெண்கள் வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசிக்க உள்ளனர்.
????? ???????, ???? ???????? ??
— Mumbai Indians (@mipaltan) April 15, 2023
Excitement levels for #ESADay: ??#OneFamily #MIvKKR #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ril_foundation MI TV pic.twitter.com/ETxsgobYqy
அதுமட்டுமல்லாமல் மும்பை மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பயிற்சியாளர் ஜுலன் கோஸ்வாமி மற்றும் வீராங்கனைகள் அனைவரும் போட்டியை நேரில் காண உள்ளனர்.