விதவிதமான இனிப்புகள், சொக்லேட்களுடன் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனேவுக்கு வரவேற்பு! எதற்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான இலங்கை ஜாம்பவானுக்கு ஐபிஎல் நிர்வாகம் வரவேற்பு அளித்து சிறப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19-ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். ஐபிஎல்லில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயவர்தனேவை வரவேற்று மும்பை இந்தியன்ஸ் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளது.
அதில் ஜெயவர்தனே புகைப்படத்துடன் விதவிதமான சொக்லேட்கள், இனிப்புகளை வெளியிட்டு A welcome treat for the coach as sweet as his timing என அவரை வரவேற்றுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜெயவர்தனே, இந்த அழகான சிந்தனைக்கு நன்றி! எனக்கு இது 7 நாள் தனிமைப்படுத்தலுக்கு உதவ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Thank you for the thoughtfulness!!! This should help me through the 7 day quarantine ? @StRegisSaadiyat https://t.co/8mGiTLk4vx
— Mahela Jayawardena (@MahelaJay) August 29, 2021