சச்சினுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய மென்டருமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
எனவே சச்சினுக்கு பிறந்த நாள் பரிசாக இன்று நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இதற்கு ஒரு காரணம் உண்டு.
அதாவது, கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியுடனும் , 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவுடனும் சச்சின் பிறந்த நாளில் விளையாடிய மும்மை அணி வெற்றி பெற்றுள்ளது. அதே போன்ற நிகழ்வு இன்றும் நடக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.