வெற்றி கணக்கை தொடரும் MI: ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் vs ஹைதராபாத் சன்ரைசர்ஸ்
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர்.
A crucial partnership of 26*(11) 👏
— IndianPremierLeague (@IPL) April 17, 2025
Aniket Verma 🤝 Pat Cummins
Will #SRH defend this? 🤔
Scorecard ▶ https://t.co/8baZ67Y5A2#TATAIPL | #MIvSRH pic.twitter.com/HSFmR3KOeA
அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 28 ஓட்டங்கள் சேர்த்தார்.
எனினும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கிளாசன் மட்டும் அதிகபட்சமாக 37 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில், ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை அபார வெற்றி
163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
தொடக்க வீரர்களாக ரையான் ரிக்கல்டன் 31 ஓட்டங்களும் மற்றும் ரோஹித் சர்மா 26 ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் வந்த வில் ஜாக்ஸ் அதிரடியாக ஆடி 36 ஓட்டங்கள் குவித்தார்.
Applying the finishing touches 🤌
— IndianPremierLeague (@IPL) April 17, 2025
🎥 #MI skipper Hardik Pandya gave them the final flourish with a brilliant cameo of 21(9)
Scorecard ▶ https://t.co/8baZ67Y5A2#TATAIPL | #MIvSRH | @mipaltan | @hardikpandya7 pic.twitter.com/hPI3CxwzLF
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 166 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |