மும்பை போட்டி ஒரு பிக்ஸிங்? அவுட் என வெளியேறி பின் திரும்பிய பொல்லார்ட்: கதறும் இணையவாசிகள்
மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி ஒரு பிக்ஸிங் என்று இணையவாசிகள் டுவிட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர்.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், இன்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதன் படி முதலில் ஆடி வரும் மும்பை அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 10.5 ஓவரில் 138 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இணையவாசிகள் இப்போட்டியை ஒரு பிக்ஸிங் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் ஹைதராபாத் அணியின் பீல்டிங் அந்தளவிற்கு மோசமாக உள்ளது.
அதே சமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன வில்லியம்சன் திடீரென்று இப்போட்டியில் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக மணீஷ் பாண்டே, இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி கூட விளையாடாத அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் இப்போட்டியின் ஒரு கட்டத்தில் பொல்லார்ட் எல்.பி.டபியூல்யூ அவுட் என நினைத்து வெளியேறினார்.
ஆனால், மூன்றாவது நடுவர் தீர்ப்பில் அவுட் இல்லை என்று வந்தது. இதனால் இதை எல்லாம் கண்ட இணையவாசிகள் இது ஒரு பிக்ஸிங் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.