பிரபல நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு
அன்னபூரணி படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
[TSL2CIR ]
அன்னபூரணி
கடந்த டிசம்பர் மாதம் நயன்தாரா நடிப்பில் 'அன்னபூரணி' எனும் திரைப்படம் வெளியானது.
சமீபத்தில் இப்படம் Netflix OTT தளத்தில் வெளியானது. நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் 'அன்னபூரணி' படம் மத உணர்வை புண்படுத்துவதாக, மும்பையில் உள்ள சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது புகாரின் அடிப்படையில் மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி-யின் தொடர்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |