169 ரன்கள் வித்தியாசம்.., 42 -வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணி
2023 - 2024 -ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி 42 -வது முறையாக சாதனை படைத்துள்ளது.
Ranji Trophy
ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய மும்பை அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மேலும், 2023 - 2024 -ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது மும்பை அணி வெல்லும் 42 -வது ரஞ்சிக் கோப்பையாகும்.
கடந்த மார்ச் 10 -ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில் விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஷ்ர்துல் தாகுர் 75 ரன்களும் பிரித்வி ஷா 46 ரன்களும் எடுத்தனர். பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த அணியில் அதிகபட்சமாக யாஷ் ரதோட் 27 ரன்களும் அதர்வா டைடே 23 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணியில் முஷிர் கான் 136 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், அஜங்க்யா ரஹானே 73 ரன்களும் சேர்த்தனர்.
விதர்பா அணி சார்பில் விளையாடிய ஹார்ஷ் துபே 5 விக்கெட்டுகளும், யாஷ் தக்கூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |