ரோஹித்தின் மாஸ்டர் பிளான்... தலைகீழாக மாறிய போட்டி: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை
கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நுணுக்கமாக திட்டமிட்டு ஆடிய மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் இடையேயான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து துடுப்பாட்டத்தில் இறங்கிய மும்பை அணி தொடக்கத்திலேயே திணறியது. டி காக் தொடக்கத்திலேயே 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அதன்பின் ரோஹித், சூர்யா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார்கள். இதில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 56 ஓட்டங்கள் எடுத்தார். ரோஹித் நிதானமாக 43 ஓட்டங்கள் சேர்த்தார்.
எஞ்சிய வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா(15), குர்னால் பாண்டியா(15) ஓட்டங்களை எடுத்தனர். ரசல் கொல்கத்தா அணிக்காக வெறும் 2 ஓவர் வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
எப்போதும் அதிரடியாக ஆடும் மும்பை அணி இன்று 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது.
கொல்கத்தா அணியின் துவக்கம் சிறப்பாகவே இருந்தது. கில் அதிரடியாக 24 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ராணா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி 47 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ் என 57 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால் எஞ்சிய வீரர்கள் கொல்கத்தாவில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால், கொல்கத்தா மிடில் ஓவர்களில் கொஞ்சம் தடுமாற தொடங்கியது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மும்பை அணி சிறப்பாக பந்து வீசியது. முக்கியமாக அட்டாக்கிங் பீல்டிங் வைத்து ரோஹித் சர்மா தெறிக்கவிட்டார்.
சிறப்பாக பந்து வீசிய ராகுல் சாகர் 4 ஓவரில் 27 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.