மும்பை இசைக் கச்சேரி: அதிகமாக மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு: இளம் பெண் மருத்துவமனையில் அனுமதி
மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அளவு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படும் நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இசை நிகழ்ச்சியில் பரபரப்பு
மும்பையின் வோர்லி பகுதியில் MSCI டோம் அரங்கில் “Klangkuenstler All Night Long” என்ற முழு இரவு இசை நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மஹிமைச் சேர்ந்த விருஷப் கங்குர்தே(28) மற்றும் அவருடைய பெண் நண்பர் இருவரும் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

உடனடியாக அருகிலுள்ள பிரீச் கேண்டி என்ற மருத்துவமனைக்கு இருவரும் எடுத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு விருஷப் கங்குர்தே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவருடன் இருந்த பெண் தோழி ஜஸ்லோக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை பிறகு சுயநினைவிற்கு திரும்பிய அந்த பெண் தோழியிடம் பொலிஸார் விசாரித்த போது, தாங்கள் மதுபானம் மற்றும் எனர்ஜி பானங்களை மட்டுமே அருந்தியதாக தெரிவித்துள்ளார்.
விசாரணை தீவிரம்

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பது போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
இருப்பினும் கச்சேரி நடைபெற்ற அரங்கில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் முதற்கட்ட விசாரணையில் விருஷப் கங்குர்தே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், பிரேத பரிசோதனையின் முடிவுகளுக்குப் பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |