டி20யில் 2வது சதம் விளாசிய வீராங்கனை! வாஷ்அவுட்டில் தப்பிய பாகிஸ்தான்
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை முனீபா அலி சதம் விளாசினார்.
64 ஓட்டங்கள்
பெல்பாஸ்ட்டில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அயர்லாந்து அணி முதலில் துடுப்பாடியது.
ஓர்லா ப்ரெண்டர்கஸ்ட் (Orla Prendergast) ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார்.
கேபி லீவிஸ் 36 (22) ஓட்டங்களும், ஏமி ஹன்டர் 29 (33) ஓட்டங்களும் எடுத்தனர். ஃபாத்திமா சனா, சதியா இக்பால், வஹீதா மற்றும் ரமீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முனீபா அலி
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஷவால் (3), நடாலியா (9) விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேற, முனீபா அலி அதிரடியில் மிரட்டினார்.
ஆலியா ரியாஸ் (Aliya Riaz) அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முனீபா அலி (Muneeba Ali) ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார். ஆலியா 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி வாஷ்அவுட்டில் இருந்து தப்பியது. அயர்லாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |