சனா மற்றும் உயிரிழந்த அவரின் தந்தைக்காக வெற்றி பெறுவோம்: சூளுரைத்த புதிய கேப்டன்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சனாவுக்காக வெற்றி பெற முயற்சிப்போம் என மகளிர் பாகிஸ்தான் அணித்தலைவர் முனிபா அலி தெரிவித்துள்ளார்.
பாத்திமா சனா
துபாயில் இன்று நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா (Fatima Sana) தந்தை இறந்துவிட்டதால் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் முனீபா அலி (Muneeba Ali) அணித்தலைவராக செயல்பட உள்ளார்.
முனீபா அலி
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி குறித்து முனீபா அலி கூறுகையில், "பாத்திமா எங்கள் கேப்டன் மற்றும் துடுப்பாட்டம், பந்துவீச்சு மிகச்சிறந்தது. மேலும் அவர் எங்கள் அணிக்கு நல்ல சமநிலையை அளிக்கிறார். எனவே, ஒரு கேப்டனாகவும் ஒரு வீராங்கனையாகவும் நாங்கள் அவரை தவறவிடுவோம்.
ஆனால் அவருக்காகவும், அவரது தந்தைக்காகவும் போட்டியில் வெற்றிபெற முயற்சிப்போம். போட்டியில் வெற்றி பெற்றால் அது ஒரு அணியாக எங்களுக்கும், பாத்திமாவுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் அவருக்காகவும், அவருடைய தந்தைக்காகவும் விளையாட விரும்புகிறோம் - நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நல்ல போட்டியில் விளையாடுவோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |