கொரோனா தடுப்பூசி போட தயக்கம்... கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய முரளி விஜய்!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய், கொரோனா தடுப்பூசி போட மறுத்து கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியதாக பிசிசிஐ SOP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான தனது சீசனை இந்த மாத தொடக்கத்தில் தமிழ்நாடு அணி தொடங்கியது.
ஆனால், தமிழ்நாடு அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் தொடரிலிருந்து விலகிவிட்டார்.
கண்டிப்பான கொரோனா நெறிமுறைகளை அமுல்படுத்த வேண்டும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ-யின் நிலையான இயக்க நடைமுறைகள் (SOP), முரளி விஜய் கொரோனா தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் பபுளில் இருக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் கொரோனா தடுப்பூசி போட தயங்குகிறார். மேலும் பபுளில் இருக்க அவர் விரும்பவில்லை.
எனவே, தமிழ்நாடு தேர்வாளர்கள், அணி தேர்வுக்கு முரளி விஜய் பெயரை ஆலோசிக்கவில்லை என பிசிசிஐ SOP தெரிவித்துள்ளது.