பாகிஸ்தான் அணி இப்படி மாறியது எப்படி? ரகசியத்தை வெளிப்படுத்திய இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன்
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அதற்கு முக்கிய காரணம் யார் என்பதை இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஐசிசியில் வெளியான கட்டுரையில் முரளிதரன் எழுதியதாவது, தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் சிறந்த நிலையில் இருக்கும் அணி என்றால் அது பாகிஸ்தான் தான்.
ஏனெனில் அவர்கள் ஏற்கனவே குரூப் 2வில் உள்ள இரண்டு வலுவான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் அணி வித்தியாசமாக இருக்கிறது. அந்த மாற்றம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் வேகமும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சும் கொண்டுள்ளனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடனை பேட்டிங் பயிற்சியாளராக சேர்த்தது பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேத்யூ ஹைடனிடமிருந்து அவர்களுக்கு ஆலோசனை கிடைப்பது தான் பெரிய விஷயம்.
ஹைடன் விளையாடிய நாட்களில் இருந்தே விளையாட்டை சரியாக புரிந்துகொண்டவர். பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடுவதற்கு ஹைடன் முக்கிய காரணம் என முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பாகிஸ்தானின் பந்து வீச்சை பாராட்டிய முரளிதரன், வலுவான பந்துவீச்சை வைத்திருக்கும் அணி தான் டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது தெளிவாகியுள்ளது என கூறியுள்ளார்.