இன்று நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்.., தமிழகத்தில் வெளுக்கும் கனமழை
முரசு புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசாப்பூர் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |