அதிகாலையில் கரையை கடந்த முரசு புயல்.. , இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
Murasu cyclone move forward and crosses the andhra- வங்கக்கடல் பகுதியில் நிலவிய முரசு புயல், இன்று அதிகாலை கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய முரசு புயல், நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையே மணிக்கு 100 முதல் 110 வேகத்தில் அதிகாலை 3.30 மணியில் இருந்து 5 மணிக்குள் கரையை கடந்துள்ளது.
மேலும், தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

இதேபோன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் நாளை மிதமான மழை பெய்யும், நாளை மறுநாள் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |