லண்டனில் உள்ள வீட்டில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுப்பு! 26 வயது இளைஞர் கைது
லண்டனில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனின் பாரஸ்ட் கேட் பகுதியில் இருந்து ஞாயிறு அன்று பொலிசாருக்கு அவசர அழைப்பு வந்தது. அந்த பகுதியில் வசிக்கும் நபரின் நலன் குறித்து அச்சம் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து 20களில் உள்ள இளம்பெண்ணின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.
அந்த பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடித்து அவரது மரணத்தை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.