ஒட்டு மொத்த நாட்டையும் பீதியில் தள்ளிய பாடசாலை படுகொலை: வெளிவரும் பின்னணி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனியார் பாடசாலை ஒன்றின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் ஒருவரது உடல் ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
புதன்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் செயின்ட் ஆண்ட்ரூ கதீட்ரல் பாடசாலையில் இருந்து வந்த அவசர அழைப்பு, மொத்த பொலிசாரையும் அங்கே திரள வைத்துள்ளது.
வாட்டர் போலோ பயிற்சியாளர்
இதில் 21 வயதான வாட்டர் போலோ பயிற்சியாளர் லில்லி ஜேம்ஸ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்ததாகவும், இதனால் இது கொலை எனவும் பொலிஸ் தரப்பு நம்புகிறது.
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சியில், 24 வயதான ஹொக்கி பயிற்சியாளர் Paul Thijssen என்பவர், குளியலறையில் அவருக்கு பிறகு நுழைந்துள்ளது பதிவாகியிருந்தது.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், இருவரும் சமீபத்தில் தான் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாகவும், வெறும் 5 வாரங்களாகத் தான் இருவரும் அறிமுகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பலியாகும் 41வது பெண்
இதனிடையே, பொலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, Paul Thijssen மாயமாகியுள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை Paul Thijssen சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டவரான Paul Thijssen தொடர்புடைய பாடசாலையில் பயின்று, பின்னர் பயிற்சியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், பாலின வன்முறைக்கு பலியாகும் 41வது பெண் லில்லி ஜேம்ஸ் என்றே கூறப்படுகிறது. கடந்த 10 நட்களில் மட்டும் 3 பெண்கள் பாலின வன்முறை சம்பவங்களால் மரணமடைந்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |