மர்மமான முறையில் மாயமான அமெரிக்க இளம்பெண்... காதலரை வலைவீசித் தேடிவந்த பொலிசார்: வழக்கில் அதிரடி திருப்பம்

United States
By Balamanuvelan Oct 21, 2021 05:30 AM GMT
Report

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தம்பதியரான நியூயார்க்கைச் சேர்ந்த Gabby Petito (22) என்ற இளம்பெண்ணும், ப்ளோரிடாவைச் சேர்ந்த Brian Laundrie (23) என்ற இளைஞரும், ஜூலை மாதம் 1ஆம் திகதி வேன் ஒன்றில் நீண்ட சுற்றுலா புறப்பட்டார்கள். ஆகத்து மாதம் 12ஆம் திகதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி, தன் காதலி இல்லாமல் Laundrie மட்டும் தன் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

Gabby எங்கே என்ற கேள்விக்கு அவரோ, அவரது பெற்றோரோ பதிலளிக்கவில்லை. Gabby தன் பெற்றோருக்கு கடைசியாக குறுஞ்செய்தி அனுப்பிய இடமான Grand Teton தேசிய பூங்காவுக்குச் சென்று பொலிசார் அவரைத் தேட, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் செப்டம்பர் மாதம் Gabbyயின் உயிரற்ற உடலை மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்கமுடிந்தது. செப்டம்பர் 21 அன்று வெளியான உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

மர்மமான முறையில் மாயமான அமெரிக்க இளம்பெண்... காதலரை வலைவீசித் தேடிவந்த பொலிசார்: வழக்கில் அதிரடி திருப்பம் | Murder Case That Caused A Great Stir In The Us

பொலிசாரின் முழுக்கவனமும் Laundrie மீது திரும்ப, அவரோ ஏற்கனவே தலைமறைவாகி விட்டிருந்தார்.

செப்டம்பர் 14ஆம் திகதிதான், தாங்கள் Laundrieயைக் கடைசியாக பார்த்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தார்கள். பொலிசார் அவரை வலைவீசித் தேடிவந்தார்கள்.

இதற்கிடையில், வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஒன்று நிகழ்ந்தது. தொடர்ந்து மௌனம் காத்துவந்த Laundrieயின் பெற்றோர் முதன்முறையாக தங்கள் மகன் ப்ளோரிடாவில் உள்ள Carlton Reserve என்ற இடத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு என்றும், ஒருவேலை அவர் அங்கு ஒளிந்திருக்கலாம் என்றும் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

அத்துடன், நேற்று முதன்முறையாக Laundrieயின் பெற்றோர் பொலிசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் பங்குகொள்ள, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் Laundrieயின் பை, மொபைல் முதலான பொருட்கள் சிக்கின.

மர்மமான முறையில் மாயமான அமெரிக்க இளம்பெண்... காதலரை வலைவீசித் தேடிவந்த பொலிசார்: வழக்கில் அதிரடி திருப்பம் | Murder Case That Caused A Great Stir In The Us

அடுத்ததாக ஒரு பெரும் அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், Laundrieயின் பொருட்கள் கிடைத்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு உடல் கிடைத்தது. அது Laundrieயுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. உயிருடன் ஒளிந்திருப்பார் என நம்பப்பட்ட Laundrie, சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளைப் பொருத்தவரை அது Laundrieயின் உடல்தான் என அவர்கள் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டாலும், அவர்கள் முறைப்படியான உடற்கூறு ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

ஆக, கடைசிவரை Gabbyயின் மரணம் மர்மமாகவே தொடர்கிறது. அவரைக் கொலை செய்தது யார், Laundrieயா? அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமலே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதுதான் சோகம்!  

மர்மமான முறையில் மாயமான அமெரிக்க இளம்பெண்... காதலரை வலைவீசித் தேடிவந்த பொலிசார்: வழக்கில் அதிரடி திருப்பம் | Murder Case That Caused A Great Stir In The Us

மர்மமான முறையில் மாயமான அமெரிக்க இளம்பெண்... காதலரை வலைவீசித் தேடிவந்த பொலிசார்: வழக்கில் அதிரடி திருப்பம் | Murder Case That Caused A Great Stir In The Us

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US