உயிரிழந்து கிடந்த மகள்... அவசரமாக பொலிசாரை அழைத்த தாய் மீது கொலைக்குற்றச்சாட்டு: வழக்கில் முக்கிய திருப்பம்
கனடாவில் தன் வீட்டிற்குள் திருடர்கள் இருவர் நுழைந்துள்ளதாகவும், தன் மகள் பேச்சு மூச்சின்றி கிடப்பதாகவும் பொலிசாரை அழைத்தார் ஒரு பெண்.
Scarboroughவில் வாழும் சிண்டி அலி என்னும் அந்த பெண்ணின் வீட்டுக்குள் பொலிசார் நுழைந்தபோது, அவரது மகள் Cynara (16) பேச்சு மூச்சின்றி கிடக்க, அவளுக்கு முதலுதவி அளிக்கும்போதே மயங்கிச் சரிந்தார் சிண்டி. பொலிசார் திருடர்களைத் தேட, திருடியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காமல் போனதுடன், திருடர்களும் கிடைக்கவில்லை.
ஆகவே, பொலிசாரின் கவனம் சிண்டி மீது திரும்பியது. அவர்தான் Cynaraவைக் கொன்றதாக பொலிசார் குற்றம் சாட்ட, சிண்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Cynara செரிப்ரல் பால்சி என்ற பிரச்சினை கொண்ட பெண் ஆவார். அவளால் பேசவோ, நடக்கவோ, தானாக சாப்பிடவோ கூட முடியாது. சிரித்தோ அடித்தோதான் அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவாள்.
அவளுக்கு அடிக்கடி வலிப்பு வரும்.
ஆகவே, சிண்டிதான் Cynaraவைக் கொன்றார் என வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை தன் மகளுக்கு வலிப்பு வந்தபோது திகிலடைந்த சிண்டி, மகளைக் காப்பாற்ற ஏதும் செய்யாததால் கூட அவள் உயிரிழக்க வாய்ப்புள்ளது, அது கூட தன் மகளுடைய நன்மை கருதி சிண்டி செய்திருக்க வாய்ப்புள்ளதே என்று கேள்வி எழுப்பியுள்ள ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம், மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.