பிரித்தானிய சிறுமி கொல்லப்பட்டு கபாப்களாக பரிமாறப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்: அதிகாரிகள் தகவல்
பிரித்தானியாவில் 14 வயது சிறுமி கொல்லப்பட்டு, உடலை நொறுக்கி கபாப்களாக பரிமாறப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக மறு ஆய்வுக்கு நிபுணர்கள் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியின் உடல் மட்டும்
கடந்த 2003 நவம்பர் மாதம் 14 வயது சிறுமி சார்லின் டவுன்ஸ் திடீரென்று மாயமானார். ஆனால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டும், சிறுமியின் உடல் மட்டும் பொலிசாரால் மீட்கப்படவில்லை.
Credit: SWNS
இந்த நிலையில் அவர் பிளாக்பூல் பகுதியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2007ல் நீதிமன்ற விசாரணையின் போது, சிறுமியின் உடல் நொறுக்கப்பட்டு, கபாப் உணவாக ஆண்கள் இருவரால் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி கருத்தை சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.
பாலியல் தொழிலுக்கு என
மேலும், சிறுமி சார்லின் பாலியல் தொழிலுக்கு என குழு ஒன்றால் தயார் படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த வழக்கில் உரிய தீர்ப்பை அளிக்க முடியாமல் நீதிபதிகள் குழம்பினர்.
Credit: SWNS
இந்த நிலையில், 2008 ஏப்ரல் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது, முடிவுக்கு வராத வழக்குகளை விசாரிக்கும் Kirsty Bennett என்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் சிறுமி சார்லினுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சார்லின் தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 100,000 பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும் என பொலிசாரும் உறுதி அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |