லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: மன நல மருத்துவமனையில் அடைக்கப்பட்டார் குற்றவாளி
லண்டனின் மனோதத்துவம் பயில வந்த இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை காலவரையறையின்றி மன நல மருத்துவமனையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோர மரணத்தை சந்தித்த மாணவி
இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சபீதா (Sabita Thanwani, 19), லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலையில் பயின்றுவந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவர, சபீதாவின் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
FAMILY HANDOUT
தகவலறிந்து பொலிசார் அங்கு வந்தபோது, சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளார்கள். மருத்துவ உதவிக்குழுவினர் சபீதாவைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.
மன நல மருத்துவமனையில் அடைக்கப்பட்டார் குற்றவாளி
பொலிசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தோட்டம் ஒன்றிலிருந்த ஷெட் ஒன்றில், தார்பாலினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த Maher Maaroufe (23) என்னும் நபர் சிக்கினார்.
பொலிசார் அவரைக் கைது செய்ய முயலும்போது, Maher, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கினார்.
METROPOLITAN POLICE
பின்னர், Maher தான் சபீதாவைக் கொலை செய்ததை Old Bailey நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். தனக்கு மன நலப் பிரச்சினைகள் உள்ளன என்றும், அதன் காரணமாகவே சபீதாவைக் கொல்லும் நிலை ஏற்பட்டது என்றும் கூறியிருந்தார் அவர்.
சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், சபீதாவும் Maherம், காதலித்து வந்துள்ளார்கள். பின்னர் சபீதா Maherஐப் பிரிய முடிவு செய்துள்ளார். அதனால்தான் அவர் சபீதாவைக் கொல்ல திட்டமிட்டார் என சபீதாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை, Maher, காலவரையறையின்றி மன நல மருத்துவமனையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |