நால்வர் குழு... பணயக்கைதிகள் விவகாரம்: வெளிநாட்டில் பிரித்தானியருக்கு கிடைத்த அதிகபட்ச தண்டனை

London ISIS Syria Crime
By Arbin Aug 20, 2022 03:35 AM GMT
Report

கைதிகளை படுகொலை செய்வது, சித்திரவதை, தாக்குதல், பணயக்கைதிகளாக சிறைபிடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்

நமது நாட்டின் வரலாற்றிலும், நமது நீதி அமைப்பிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம்

மேற்கு லண்டனை சேர்ந்த நபருக்கு, சிரியாவில் பணயக்கைதிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நால்வர் குழு... பணயக்கைதிகள் விவகாரம்: வெளிநாட்டில் பிரித்தானியருக்கு கிடைத்த அதிகபட்ச தண்டனை | Murder Of Hostages Isis Beatle Life Sentence

@PA

34 வயதான எல் ஷஃபீ எல்ஷேக் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் இணைந்து கைதிகளை படுகொலை செய்வது, சித்திரவதைக்கு உட்படுத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது, பணயக்கைதிகளாக சிறைபிடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்ஜீனியா, அமெரிக்காவில் தீர்ப்பு அறிவித்தபோது உணர்ச்சியற்று காணப்பட்ட எல் ஷஃபீ எல்ஷேக், தீர்ப்பை வாசித்தவரை மட்டும் பார்த்தபடி காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராஜ் பரேக் என்பவர் தெரிவிக்கையில், நமது நாட்டின் வரலாற்றிலும், நமது நீதி அமைப்பிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும் என்றார்.

எல் ஷஃபீ எல்ஷேக் உட்பட்ட குழுவால் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமான நபர் அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் ஃபோலி. இவரது தாயார் டயான் ஃபோலே தெரிவிக்கையில்,

ஐ.எஸ் பயங்கரவாத குழுவின் ஒரு பகுதியாக இருந்தபோது நீங்கள் செய்த கொடூரமான மனித உரிமைக் குற்றங்களை இந்த விசாரணை வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த வெறுப்பு உங்கள் மனிதநேயத்தை முந்தியது என்றார்.

நால்வர் குழு... பணயக்கைதிகள் விவகாரம்: வெளிநாட்டில் பிரித்தானியருக்கு கிடைத்த அதிகபட்ச தண்டனை | Murder Of Hostages Isis Beatle Life Sentence

@Getty

எல் ஷஃபீ எல்ஷேக் உட்பட்ட நான்கு பிரித்தானியர்கள் இணைந்த ஐ.எஸ் குழுவால் மொத்தம் 27 பணயக்கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 2018ல் எல்ஷெய்க் மற்றும் கோட்டே ஆகிய இருவரும் துருக்கிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படைகள் கைது செய்தனர்.

அமெரிக்க பணயக்கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக கோட்டே ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கு லண்டனைச் சேர்ந்த டேவிஸ், துருக்கியால் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 10 புதன்கிழமை லூடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நால்வர் குழுவில் முக்கியமானவர் என கருதப்படும் ஜிஹாதி ஜான் என்ற எம்வாசி 2015ல் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US